என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » இந்தியா இலங்கை கிரிக்கெட்
நீங்கள் தேடியது "இந்தியா இலங்கை கிரிக்கெட்"
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் இந்திய வீராங்கனகைள் கடைசி போட்டியில் 51 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது தொடரை 4-0 எனக் கைப்பற்றியது #INDWvSLW
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வந்தது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 எனக் கைப்பற்றினார்கள்.
அதன்பின் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 3-வது மற்றும் 4-வது போட்டியில் இந்தியா வெற்றி பெற்று தொடரை 3-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகித்தது.
இன்று 5-வது மற்றும் கடைசி போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் தொடங்கியது. தொடக்க வீராங்கனைகள் மிதாலி ராஜ் (12), மந்தனா (0) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து வந்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 31 பந்தில் 46 ரன்கள் சேர்த்தார். அடுத்து வந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் 5 சிக்சருடன் 63 ரன்கள் குவித்தார்.
அதன்பின் வந்த வீராங்கனைகள் சொற்ப ரன்களில் வெளியேற இந்தியா 18.3 ஓவரில் 156 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இலங்கை அணியில் ஸ்ரீவர்தனே, பெர்னாண்டோ தலா மூன்று விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.
பின்னர் 157 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை வீராங்கனைகள் களம் இறங்கினார்கள். இந்தியாவின் நேர்த்தியான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 105 ரன்னில் இலங்கை சுருண்டது. இதனால் இந்தியா 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 4-0 எனக் கைப்பற்றியது.

பெண்கள் கிரிக்கெட்டில் இலங்கைக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. #INDWvSLW
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரை இந்திய வீராங்கனைகள் 2-1 எனக் கைப்பற்றினார்கள்.
தற்போது ஐந்து போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. 2-வது போட்டி மழையால் கைவிடப்பட்டது. 3-வது ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று தொடரில் 2-0 என முன்னிலைப் பெற்றது.
இந்நிலையில் 4-வது ஆட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 17 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது. இலங்கை வீராங்கனை ஸ்ரீவர்தனே அதிகபட்சமாக 32 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார். இந்திய வீராங்கனை அனுஜா பட்டீல் 3 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களம் இறங்கியது. ஜெமிமா ரோட்ரிக்ஸ் (52), அனுஜா பட்டீல் (54) அரைசதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருக்க இந்தியா 15.4 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் தொடரை கைப்பற்றியதுடன் 3-0 என முன்னிலை வகிக்கிறது. 5-வது மற்றும் கடைசி போட்டி நாளை நடக்கிறது.

×

X